பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதையடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் கதை எழுதி வருகிறாராம். அதன் காரணமாக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் முகாமிட்டு உள்ளாராம். அதேபோல் நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்திற்காக மும்பையில் இருக்கிறார். இதன் காரணமாக இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை மும்பைக்கு கொண்டு சென்று தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்குள் தங்களது இரட்டை குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




