'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
டிரெண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் ராஜா ராமமூர்த்தி தயாரித்துள்ள வெப் தொடர் ஆக்சிடெண்டல் பார்மர். சுகன் ஜெய் எழுதி இயக்கியுள்ளார். வைபவ், ரம்யா பாண்டியன், படவா கோபி, வினோதினி வைத்யநாதன், சுட்டி அரவிந்த் மற்றும் கல்லோரி வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.
தொடரின் கதை இதுதான் : வைபவ் ஒரு வேலையில்லா பட்டதாரி. அவருக்கு அவரது தாத்தா ஒரு சிறிய நிலத்தை எழுதிவைத்து விட்டு இறந்து போகிறார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்த நேரத்தில் அந்த நிலத்தில் போதை செடி வளர்வதை கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது தான் கதை. வில்லேஜ் காமெடி சீரிஸாக தயாராகி உள்ளது.