ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனிடையே, இந்த வருடம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' பாடலை மேடையில் நேரடியாகப் பாட உள்ளார்கள். தெலுங்குப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் பாடப் போகிறார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்பு மிக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.