ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. இதனை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கங்குலி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். அவரது வாழ்க்கை சினிமாவாவது ஒரு சினிமா கலைஞனாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமான நான் அதில் நடிக்கவில்லை. எனக்கு இயக்குனர்கள் காதல் கதைகளைத்தான் எழுதி வருகிறார்கள். எனக் கும் காதல் கதைகள்தான் செட்டாகும். என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே தோனி, சச்சின், மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும், இந்தியா கபில்தேவ் தலைமையில் உலக கோப்பைபை வென்றதை பின்னணியாக கொண்டாடும் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்து கங்குலி வாழ்க்கை சினிமாவாவது உறுதி என்றாலும் அதில் நடிப்பது யார்? என்ற கேள்வி தொடர்கிறது.