பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

அஜித் குமார் நடிக்கும் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தனர். ஆனால் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பயோவில் இருந்து அஜித் 62 படத்தின் தலைப்பை நீக்கினார் .
தற்போது அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவந்து தன் அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தனது அடுத்த படத்தில் லவ் டுடே படத்தில் ஹீரோ மற்றும் இயக்குனராக கலக்கிய பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளார் விக்னேஷ் சிவன். அவரை தொடர்ந்து அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இந்த படத்தை பற்றி கூடிய விரைவில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.