புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இசை ஆல்பங்களின் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்பிறகு சினிமா இசை அமைப்பாளர் ஆனார், தொடர்ச்சியாக நடிகர், இயக்குனர் என்று தன்னை வளர்த்துக் கொண்டார். அவரின் முதல் படம் 'மீசைய முறுக்கு' வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது வீரன், பி.டி.சார் படங்களில் நடித்து வருகிறார்.
ஆதியின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரின் தனி இசை ஆல்பங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது காதலர் தினமான இன்று 'பொய் பொய் பொய்' என்ற இசை ஆல்பத்தை காதலர் தின சிறப்பு ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் ஆதி அறிவித்துள்ளார்.