மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சார்பில் கல்கியின் அறக்கட்டளைக்கு மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இந்த நிலையில். “கல்கி : பொன்னியின் செல்வர்”என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம் கூறும்போது “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது”என்றார்.