பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
2023ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாகவே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் இன்று(பிப்., 4) 25வது நாளைத் தொட்டுள்ளன.
'வாரிசு' படம் 250 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'துணிவு' படம் 200 கோடியைக் கடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 'வாரிசு' படத்துடன் ஒப்பிடும் போது 'துணிவு' படம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சில புதிய படங்கள் வெளிவந்திருந்தாலும் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களும் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் 'துணிவு' படத்தின் ஓட்டம் முடிவடையும். அப்படத்தை ஓடிடியில் பிப்ரவரி 8ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். 'வாரிசு' படம் ஓடிடியில் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.