ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜயின் 67வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்போது காஷ்மீரில் படக்குழு முகாமிட்டுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு இன்று (பிப்.,3) அறிவிப்பதாக நேற்றே தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ‛லியோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோவில், சாக்லேட் தயார் செய்யும் நடிகர் விஜயை தேடி வில்லன்கள் குழு முகமூடிகளுடன் வருகிறார்கள். அவர்களை வாளுடன் விஜய் எதிர்கொள்வது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ மற்றும் தலைப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியிடப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




