விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
விஜய் நடித்த வாரிசு படம் பொங்கல் பண்டிகை படமாக தமிழ், தெலுங்கில் வெளியானது. மாறுபட்ட விமர்சனங்கள் வந்தபோதும் படம் நல்ல வசூலை கொடுத்ததாக படத் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா வீடியோவை தயாரிப்பு தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இது சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் முன் நடந்தது. அதனை தற்போதுதான் வெளியிட்டு உள்ளனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.