ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சென்னை 28 படத்தில் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டை வைத்து பல படங்கள் வந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் நடிப்பில் ஒரு கிரிக்கெட் படம் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
“இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.