இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
விக்ரம் படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தில் அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது திருப்பதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். இங்கு கமல் நடிக்கும் சேனாபதி வேடத்தின் இளமைக்கால காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் சென்று இறங்கி இருக்கிறார் கமல்ஹாசன். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.