அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
முன்னணி நடிகையான குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியிலும் இடம் பெற்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்த அவர், இதற்காக எனது பயணத்தை நிறுத்திக்கொள்ள போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் குஷ்பு. அப்போது தான் அமர்ந்து செல்வதற்கு சக்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதோடு அந்த டுவிட்டர் பதிவை ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு டேக் செய்து, முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணிகளை அழைத்துச் செல்ல தேவைப்படும் சக்கர நாற்காலி கூடவா உங்களிடத்தில் இல்லை. இதற்காக நான் அரை மணி நேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதையடுத்து வேறு ஒரு விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலி வாங்கி வந்து என்னை அழைத்து சென்றார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
குஷ்புவின் இந்த பதிவை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குஷ்புவுக்கு பதில் அளித்துள்ளது.