பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்தவர் யஷ். இந்த படங்களின் மெகா ஹிட் காரணமாக அவர் இந்திய அளவில் பிரபலமடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பக்கத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது சலார் படத்தில் கேஜிஎப் நாயகனான யஷ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கேஜிஎப் படத்தின் வெற்றி காரணமாக யஷ் மிகப்பெரிய நாயகனாக உருவெடுத்து இருப்பதால் இந்த சலார் படத்தில் அவர் நடித்தால் படத்திற்கு இன்னும் பெரிய பலமாக இருக்கும் என்பதால் அவரை இப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பிரசாந்த் நீல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.