நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் பல தமிழ்ப் படங்கள், தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவைக் காதலிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இருவரும் சேர்ந்து காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று பூஜை எல்லாம் கூட செய்தார்கள். ஆனால், சமந்தா, நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு பின் அவரை விட்டும் பிரிந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்தது திரையுலகத்தில் கிசுகிசுவைக் கிளப்பியது. சென்னையில் நடந்த 'பொன்னியின் செல்வன்' விழாவில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிதியும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்தான்.
நேற்று தெலுங்கு நடிகர் சர்வானந்த்திற்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சித்தார்த், அதிதி இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர். 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் சித்தார்த், அதிதி சேர்ந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள் என்கிறது தெலுங்கு வட்டாரம். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.