அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வாரிசு' படம் வெளியீட்டிற்கு முன்பு தெலுங்குத் திரையுலகத்தில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. நேரடி தெலுங்குப் படங்களான சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என அங்கு பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள்.
'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு சில வருடங்களுக்கு முன்பு 'பேட்ட, விஸ்வாசம்' படங்கள் அங்கு டப்பிங் ஆகி வெளியான போது அந்தப் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேரடிப் படங்களுக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று பேசினார். அவர் பேசியதையே அவருக்கே திருப்பிக் கொடுத்தனர் சில தெலுங்கு சினிமா பிரமுகர்கள்.
கடைசியில் தெலுங்குப் படங்களுக்கு விட்டுக் கொடுத்து தமிழில் படம் வெளிவந்த நான்கு நாட்களுக்குப் பிறகுதான் தெலுங்கில் 'வாரசுடு' படத்தை வெளியிட்டார் தில் ராஜு. அங்கு படம் 25 கோடி வசூலைப் பெற்றாலும் லாபத்தைத் தொட தடுமாறி வருகிறது. அதற்குக் காரணம் அதிக விலைக்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமை. 14 கோடிக்கு விற்கப்பட்டு இதர செலவுகளுடன் சேர்த்து அந்தப் படம் 15 கோடி ஷேர் தொகையைத் தந்தால்தான் லாபத்தைப் பெற முடியும். ஆனால், இதுவரை 14 கோடி வரைதான் பெற்றுள்ளதாம். இன்னும் ஒரு கோடி ஷேர் தொகை பெற்றால்தான் லாபத்தைத் தொட முடியும் என்கிறார்கள்.
'துணிவு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'தெகிம்பு' 3 கோடிக்கு விற்கப்பட்டதாம். மொத்த வசூலாக 4 கோடி கிடைத்துள்ளது. இதுவரையில் ஷேர் தொகையாக 2 கோடி மட்டுமே வந்துள்ளது என்கிறார்கள். மேலும் 1 கோடி வந்தால்தான் படம் லாபத்தை ஈட்ட முடியும். அதற்கு வாய்ப்பேயில்லை என்பதே தகவல்.
இன்று முதல் தியேட்டர்களில் முன்பதிவு கூட சரியாக நடக்கவில்லை. நேற்றோடு இரண்டு படங்களுக்குமான வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்பதே உண்மை. 25 கோடி வரை வசூலித்தாலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட காரணத்தால் 'வாரிசு' லாபத்தைப் பெற முடியாமல் தவிக்கிறது. 'துணிவு' படம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் குறைந்த அளவே வசூலித்ததால் தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.
ஆக, தெலுங்கில் 'வாரிசு' குறைவான வித்தியாசத்தில் நஷ்டத்தையும், 'துணிவு' கூடுதலான வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவுகிறது என்பதே இன்றைய நிலை.