ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62 வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளையே படமாக்கி வந்துள்ள விக்னேஷ் சிவன் இந்த படத்தில் ஆக்சன் கலந்த ஒரு கதையை படமாக்க போகிறார். இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் 62வது படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராக உள்ளது .




