மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ்த் திரைப்படமான 'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் 1400 மில்லியன் பார்வைகளைக் கடந்து தென்னிந்திய சினிமா பாடல்களில் முதலிடத்தில் உள்ளது. இப்போதும் அந்தப் பாடலை தினமும் சில லட்சம் பேர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தெலுங்குத் திரைப்படப் பாடலான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தமன் இசையில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் 800 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்திலும், அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'ராமுலு ராமுலா' பாடல் 565 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. 'புஷ்பா' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி' பாடல் 561 மில்லியன் பார்வைகளைப் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறது.
தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களில் நான்கு பாடல்கள் மட்டுமே 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக இருந்தன. அதிலும் ஒரே ஒரு தமிழ்ப் பாடல் மட்டுமே இதுவரையில் இடம் பெற்றிருந்தது. இப்போது இரண்டாவது பாடலாக 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக 'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் இடம் பிடித்துள்ளது. ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தப் பாடல் 500 மில்லியன் பார்வைகளைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இருப்பினும் 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் 150 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளை சாதனை படைத்ததை 'அரபிக்குத்து' பாடலால் முறியடிக்க முடியவில்லை.