ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் அதிக அளவில் வெளியாகும் முக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் கடந்த 11ம் தேதி வெளியானது.
அமெரிக்காவில் இரண்டு படங்களையும் வெளியிட்ட வினியோக நிறுவனங்கள் படங்களின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளன. 'துணிவு படம் 7 லட்சம் யுஎஸ் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடியே 70 லட்சம். அஜித்தின் திரையுலக வரலாற்றில் அமெரிக்க வசூலில் இந்த வசூல்தான் 'டாப்' என்கிறது படத்தை வெளியிட்டுள்ள சரிகம சினிமாஸ் வினியோக நிறுவனம்.
'வாரிசு, வாரசுடு' இரண்டும் சேர்த்து 9 லட்சத்து 50 ஆயிரம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 69 லட்ச ரூபாய். 'துணிவு' படத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 'வாரிசு' படம் வசூலில் முந்தி வருகிறது. விரைவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற வாய்ப்புள்ளது.