‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு தப்பும் தவறுமாய் 'பொங்கள்' வாழ்த்து கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நாடோடி மன்னன்' என்ற பாடல் வெளியீட்டு பற்றி நேற்று மாலை படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது.
அதில், “இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்” என 'பொங்கல்' என்பதற்கு தவறாக 'பொங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அடிக்கடி தமிழ், தமிழ் எனப் பேசும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கூட அந்த தவறுதலான போஸ்டரையே அவரது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். பலரும் அந்தத் தவறை சுட்டிக் காட்டியும் இத்தனை மணி நேரமாக அந்த போஸ்டரை யாரும் திருத்தி மீண்டும் பதிவிடவில்லை.
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு இப்படி 'படிக்காத' வாத்தி ஆக இருக்கிறார் இந்த வாத்தி என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.




