தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கிஷோர் ரெட்டி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சொந்த ஊரு, டேக் ஓவர், ஸ்ரீகாரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார் என கூறப்படுகிறது.