பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் என இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் மற்றும் மலையாளத்தில் கிறிஸ்டி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் முதல் நாளை கழித்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தன்னுடைய சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் புத்தாண்டு பற்றி அவர் கூறும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் அவ்வளவு அழகானதாக இருந்தது. இங்கு என்னைச் சுற்றிலும் மலைகளும் இளஞ்சிவப்பு நிற பூக்களுமாக இந்த நாளை ரொம்பவே இனிமையாக்கி விட்டன. கடந்தாண்டு எனக்கு மிகவும் நல்லபடியாகவே கடந்து சென்றதாக நான் உணர்கிறேன். இந்தாண்டும் அதே போல நிறைய மகிழ்ச்சி, அன்பு, முத்தங்கள் நிறைந்ததாக உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.