லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைகின்றனர். அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது . இந்த தகவலை நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "விஜய் 67 படப்பிடிப்பு இன்று(ஜன., 2) துவங்கியது . லோகேஷ் மற்றும் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார் .