பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து மணிரத்னம், பா. ரஞ்சித். எச்.வினோத், மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ் என பலரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்றும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.