ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 'துணிவு' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யுடியூபில் வெளியானது. 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளையும், 1.1 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. இருப்பினும் விஜய்யின் 'பீஸ்ட்' டிரைலர் சாதனையை 'துணிவு' டிரைலரால் முறியடிக்க முடியவில்லை.
'பீஸ்ட்' டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியா மொழித் திரைப்படங்களில் அதிக வேகத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது. 2.2 மில்லியன் லைக்குகளும் கிடைத்தது.
'பீஸ்ட்' டிரைலர் சாதனையை 'துணிவு' டிரைலர் முறியடிக்கவில்லை. தன்னுடைய முந்தைய படத்தின் சாதனையை விஜய் தான் மீண்டும் முறியடிக்க வேண்டும் போலிருக்கிறது. விரைவில் 'வாரிசு' டிரைலர் வெளியாக உள்ளது. அப்போது அந்த டிரைலர் 'பீஸ்ட்' சாதனைகளை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.