விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

2017ல் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் ‛அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கியிருந்தார் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு அதிலும் இந்த படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் 'அனிமல்' என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.