ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஆங்கிலப் புத்தாண்டான 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வழக்கமாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடுவர். சென்னையில் இருந்தால் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறுவார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்த் இல்லம் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 9 மணியளவில் வீட்டில் முகப்பு பகுதிக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் வைத்தார். பின்னர், ரசிகர்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.