இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தமிழில் விஜய் உடன் இவர் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ஹிந்தியிலும் நடித்து வரும் இவர், சித்தார்த் மல்கோத்ரா உடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்பட விழாவில் பேசிய ராஷ்மிகா : பாலிவுட்டில் தான் நிறைய ரொமான்ட்டிக் பாடல்கள் வருகின்றன. தென்னிந்தியாவில் மசாலா மற்றும் ஐட்டம் பாடல்கள் தான் அதிகம் வருகின்றன. ஹிந்தியில் எனது முதல் ரொமான்ட்டிக் பாடல். இதை காண ஆவலாய் உள்ளேன் என்றார்.
ஹிந்தியில் இவரின் முதல் ரொமான்ட்டிக் பாடல் என்பதற்காக தென்னிந்திய சினிமா பாடல்களை இப்படி பேசுவதா என கூறி இவரின் இந்த கருத்திற்கு தென்னிந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்தார் போல் இவர் பேசுகிறார் என வசை பாடுகின்றனர்.
சமீபத்தில் கன்னட திரையுலகத்தை புறக்கணிக்கும் விதமாக இவர் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இப்போது இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.