தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவரது சாகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது. சமீப காலமாக அவருக்கு பாலிவுட்டிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பேமிலிமேன்-2 வெப் சீரிஸில் அவர் நடித்ததை தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத்தேடி வருகின்றன. அந்த வகையில் பேமிலிமேன்-2 வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாக உள்ள சிட்டாடல் வெப் சீரிஸில் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் சமந்தா.
அதேசமயம் சமீபகாலமாக சமந்தாவின் உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பில் நடிப்பதை சில நாட்களுக்கு மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் என்றும் அதனால் சில படங்களில் இருந்து விலகி விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் சிட்டாடல் வெப் சீரிஸில் இருந்து சமந்தா விலகவில்லை என்றும் அவர்தான் அதன் முக்கிய தூண் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து உறுதியாக கூறியுள்ளார்கள். அவர் ஏற்கனவே இந்த வெப் சீரிஸில் நடிக்க ஜனவரியில் தேதிகள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்றும் சரியாக அந்த சமயத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.