மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினிகாந்த் நடித்த ‛அண்ணாமலை, பாட்ஷா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் ரஜினியை வைத்து இயக்கிய ‛பாபா' திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியானது. இவர் முதன்முறையாக கமலை வைத்து இயக்கிய ‛சத்யா' என்கிற படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவரை வைத்து ‛இந்திரன் சந்திரன்', கடைசியாக ‛ஆளவந்தான்' ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளவந்தான் படத்தில் தன்னிடம் ஜெயம் ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்த தகவலையும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
இதுபற்றி அவர் கூறும்போது, “எடிட்டர் மோகன் தனது மகன் ஜெயம் ரவியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் நான் ஆளவந்தான் படத்தை இயக்கி வந்தேன். அதில் அவரை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன்.. ஆனால் சில நாட்கள் சென்ற பிறகு தான், அவர் வெறும் உதவி இயக்குனராக மட்டும் என்னிடம் சேரவில்லை.. பின்னாளில் நடிகராக வேண்டும் என்பதற்காக நடிகர் கமலின் நடிப்பை அருகில் இருந்து பார்த்து அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்காகவே என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார் என தெரியவந்தது.. ஆளவந்தான் முடிந்த சில நாட்களிலேயே ஜெயம் படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமான நிகழ்வும் நடந்தது” என்று கூறியுள்ளார்.