அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் |
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு படத்தையும் இயக்கியிருக்கிறார் எச்.வினோத். இந்த படமும் விஜய்யின் வாரிசு படத்தை போலவே வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த நேரத்தில் துணிவு படம் குறித்தும் அப்படத்தில் அஜித்தின் நடிப்பு குறித்தும் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வரும் இயக்குனர் எச்.வினோத்திடம், பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு, துணிவு என்ற இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தைதான் முதல் நாளிலேயே பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
காரணம், அஜித் நடித்துள்ள துணிவு படத்தை நானே இயக்கியிருப்பதோடு இந்த படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்து விட்டேன். அதனால் விஜய்யின் வாரிசு படம் எப்படி உள்ளது என்பதை முதல் நாளிலேயே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன் என்ற அந்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.