மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொங்கல், தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மற்ற மொழிப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. 2023 பொங்கலுக்கு தமிழ்ப் படமான 'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரிசுடு' படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் அதிக தியேட்டர்களில் வெளியிட அதன் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டுள்ளார். தியேட்டர் வட்டாரங்களில் பெரும் செல்வாக்குடன் இருப்பவர் அவர். அதனால், பொங்கலுக்கு வெளியாக உள்ள நேரடித் தெலுங்குப் படங்களுக்கு பாதிப்பு வரும் என தெலுங்கு திரையுலகத்தில் இது குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் வெங்கடேஷின் அண்ணனும், நடிகர் ராணா டகுபட்டியின் அப்பாவுமான சுரேஷ் பாபு இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான வெங்கடேஷ் நடித்த 'நாரப்பா' படத்தை நாளை டிசம்பர் 13ம் தேதி வெங்கடேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் நாளை ஒரு நாள் மட்டும் தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இப்படம் கடந்த வருடம் ஓடிடியில் வெளியானது.
நாளை இப்படத்தின் தியேட்டர் திரையீடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்ப் படங்களுக்கான கட்டுப்பாடு குறித்து அவர் பேசுகையில், “மற்ற மொழித் திரைப்படங்களை யாரும் தடுக்க முடியாது. பொங்கல் சீசனில் அனைத்து படங்களும் வெளியாகும். தெலுங்கு சினிமாவின் எல்லைகள் விரிவடைந்துள்ளது. 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா,' ஆகிய படங்கள் தமிழ்த் திரையுலகத்தில் நன்றாக ஓடியுள்ளது. தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுத்தால்தான் பான் இந்தியா படங்களாக வெளிவரும் 'புஷ்பா 2' போன்ற படங்களுக்கு அவர்களும் தியேட்டர்களைத் தருவார்கள்.
நமது படங்கள் மற்ற மொழிகளில் சாதாரணமாகப் பார்க்கப்படுவதில்லை. 'ஆர்ஆர்ஆர்' படம் சென்னையில் வெளியான போது அங்கும் சில பிரச்சினை வந்தது. லோக்கலாக சில பிரச்சனைகள் இருக்கும். ஒரு படம் நல்ல படம் என்றால் அது நிறைய தியேட்டர்களில் ஓடும். ஒரு படம் மோசமான படம் என்றால் அது அடுத்த நாளே பாதிப்படையும். இது வியாபாரம். ஒரு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கப்பட்டால் அது ஓடும் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கும். அது எந்த மொழிப் படம் என்று யாரும் பார்ப்பதில்லை. நமது தெலுங்குப் படங்கள் மற்ற மொழிகளில் ஓடி அங்கும் வெற்றி பெறுகிறது. இது ஒரு புதிய வழிமுறையாக மாறிவிட்டது. அவற்றுடன் நாம் வாழப் பழக வேண்டும். இதைப் பற்றி ஓவராக ஆராயக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.
சுரேஷ் பாபுவின் அப்பா டி.ராமா நாயுடு ஆரம்பித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 58 ஆண்டு காலமாக திரைப்படத் தயாரிப்பில் இருக்கிறது. தமிழில் 'வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, தெய்வப் பிறவி, மைக்கேல் ராஜ், கை நாட்டு,' மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' உள்ளிட்ட படங்களையும் தெலுங்கில் நிறைய படங்களையும் மற்றும் ஹிந்தி, கன்னடம், மலையாளம், போஜ்புரி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா மொழிகளிலும் படங்களைத் தயாரித்துள்ளார்கள்.