இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வம்சி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையொட்டி பட புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ஹிட் அடித்து வரும் நிலையில் விரைவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தற்போது வாரிசு படத்தின் பிரமாண்டமான விளம்பர போஸ்டர்கள் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பிரமோசன் வாரிசு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த ஒரு வீடியோவை வாரிசு படத்தை தமிழகத்தில் வெளயிடும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு ரஜினியின் கபாலி படம் விமானத்திலும், கமலின் விக்ரம் படம் ரயிலிலும் விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து இப்போது விஜய்யின் வாரிசு பட விளம்பரம் மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.