இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஜாக்கிசான் படங்களில் ஆக்ஷன், காமெடி கலந்து அதிரடி காட்டிய படம் ரஷ் ஹவர். 1998ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தன. வயது மூப்பின் காரணமாக இனி ஆக்ஷன் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்த ஜாக்கிசான் வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ரஷ் ஹவர் படத்தின் 4வது பாகம் வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாக கூறியிருக்கிறார் ஜாக்கிசான். சவுதி அரேபியாவில் நடக்கும் ரெட் சீ சர்வதேச திரைப் பட விழாவில் கலந்து கொண்ட ஜாக்கிசான், இதனை தெரிவித்திருக்கிறார். 4ம் பாகம் என்பதை குறிக்கும் வகையில் அவர் 4 விரல்களை காட்டியிருக்கிறார். அவருடன் ரஷ் ஹவர் படத்தில் நடித்து வரும் கிரிஷ் தக்கரும் இணைந்து இதனை அறிவித்திருக்கிறார். இதனால் ஜாக்கிசான் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.