இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2002ம் ஆண்டில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் பாபா. அப்படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் பாபா பட விநியோகஸ்தர்களிடம் தான் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தார் ரஜினி.
என்றாலும் தற்போது மீண்டும் பாபா படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த பாபா படத்தில் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு 7 வரங்கள் கொடுக்கப்பட்டு அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவார். ஆனால் இந்த டிஜிட்டல் பாபாவில் ஐந்து வரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனால் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஜப்பான் பெண்ணுக்கு உதவி செய்ய ரஜினி உச்சரிக்கும் மந்திரமும் எடிட் செய்யப்பட்டுள்ளது. அதோடு கிளைமாக்சும் மாற்றப்பட்டு பாபாவுக்கு மறு ஜென்மம் கொடுக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.