2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகம் ஆனவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. அதன் பிறகு நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்கிறார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நாயகியாக இவர் நடிப்பவர் இந்த படம் மூலம் தமிழில் நாயகியாக களமிறங்கி உள்ளார்.