நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி மற்றும் பலர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான படம் 'த வாரியர்'. இப்படம் இரு மொழிகளிலுமே தோல்வியைத் தழுவியது. ஆனாலும், இப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு இதன் ஹிந்தி டப்பிங் யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கு இதுவரையிலும் 54 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது ஆச்சரியமான ஒன்று. 5 கோடிக்கும் அதிகமான முறை அப்படம் பார்வையிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் படம் தியேட்டர்களில் வெளியான போது யு-டியூப்பில் பார்த்த 5 கோடி பேர்களில் ஒரு கோடி பேராவது வந்து பார்த்திருந்தால் படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும்.