துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் கதிரேசன் - மீனாட்சி தம்பதி. இவர்கள், கடந்த 2015ம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் நடிகர் தனுஷ் எங்கள் மகன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டை விட்டு சென்றுவிட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். நடிகர் தனுஷ் எங்களுக்கு மாதம்தோறும் பெற்றோர் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 2017ம் ஆண்டு மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேலூர் தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அப்போதும் மேலூர் தம்பதிகள் விடுவதாக இல்லை. மதுரை உயர்நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் டைரக்டர் கஸ்தூரிராஜாவின் மகன்தான் தனுஷ் என உயர்நீதி மன்றம் முடிவு செய்யவில்லை. தனுஷ் பிறப்பு சான்றிதழின், உண்மை தன்மையை ஆராய மதுரை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வரை கிடைக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எனது வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, எனது வழக்கை, மீண்டும் முறையாக விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உள்ள ஆவணங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. இதன் மூலம் இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.