அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா. அவரிடம் பல படங்களுக்கு உதவியாளராக இருந்தவர் பிரேம்ஜி. நகைச்சுவை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கும் பிரேம்ஜி யுவனை எப்போதுமே தன்னுடைய குரு என்றே சொல்வார். நேற்று பிரேம்ஜிக்கு யுவன் ஐபோன் ஒன்றைப் பரிசளித்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து பிரேம்ஜி, “ஐபோனை பரிசளித்த எனது இசை குரு யுவனுக்கு நன்றி, ஐ லவ் யு” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரேம்ஜிக்கு மட்டும்தான் யுவன் ஐ போன் பரிசளித்துள்ளார் போலிருக்கிறது. அவர் பகிர்ந்துள்ள போட்டோவில் பக்கத்தில் பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு சோகத்துடன் நின்று கொண்டிருக்கிறார். “எனக்கு கிப்ட் இல்லையா” என்று யுவனிடம் டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு யுவன், “உங்களுக்காக சில இசையை 'குக்' செய்து வருகிறேன்,” என பதிலளித்துள்ளார். அதற்கு வடிவேலுவின் மீம்ஸ் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் 'கஸ்டடி' படத்திற்கு அப்பா இளையராஜாவுன் இணைந்து இசையமைக்கிறார் யுவன்.