மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் |

2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு படங்களின் வெளியீடும் பொங்கலுக்குத்தான் என்பதை முன்னரே அறிவித்துவிட்டார்கள். இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
'துணிவு' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் 'வாரிசு' படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது. இரண்டு படங்களும் சம அளவில் வெளியாகும் என ஒரு பேட்டியில் உதயநிதியே சொன்னாலும் அதை விஜய் ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லை.
இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் எந்தத் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 'துணிவு' படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. அதை சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். அதையடுத்து 'வாரிசு' படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் வெளியிட்டது.
தியேட்டர்கள் புக்கிங் முழுவதுமாக முடிந்த பிறகு தான் இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒரே நாளில் இரண்டு படங்களும் வருமா அல்லது ஏதாவது ஒரு படம் ஒரு நாள் முன்னதாக வெளியாகுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.