ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உப்பென்னா என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு மளமளவென உயர்ந்து விட்டார். அந்த வகையில் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் வணங்கான் படத்திலும், தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி என்கிற படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக அஜயண்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், தற்போது வெங்கட்பிரபுவின் டைரக்ஷனில் கஸ்டடி படத்தில் நடித்து வந்தார் கிர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக டொவினோ தாமஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜித்தின் லால் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.