ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்
அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூரியா சிவா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.