'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
கடந்த 2010ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்த ‛மங்காத்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பில்லாவை தொடர்ந்து அஜித்தின் திரையுலக பயணத்தில் இது மீண்டும் ஒரு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது அவரின் 50வது படமும் கூட. இந்த படத்தில் இருவருமே நெகட்டிவ் ஹீரோக்களாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்களிடம் இந்த இருவரின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது அஜித்-அர்ஜுன் இருவரும் சந்தித்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தியும் பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் (நவ-20) கொண்டாட்டத்தை முன்னிட்டு தான் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
அஜித்துக்கு ஷாலினி அறிமுகமாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே சங்கர் குரு படத்தில் அர்ஜுனுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்திருந்தார் ஷாலினி. அந்தவகையில் தனக்கு எப்போதுமே செல்லப்பிள்ளையான ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு நடைபெற்ற ஹோட்டலில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலரும் அஜித், அர்ஜுன் இருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்கின்றன.