ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது.
விவேக் எழுத, விஜய், மானசி பாடிய இந்தப் பாடலுக்கான லிரிக் வீடியோவில் விஜய், ராஷ்மிகாவின் அதிரடி நடனமும், அந்தப் பாடலைப் பாடிய மானசியின் அழகும் கூட ரசிகர்களைக் கவர்ந்தது. பத்து நாட்களில் 50 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யு டியூபில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைத் தந்த நடிகர் விஜய் மட்டுமே. விரைவில் இந்த 'ரஞ்சிதமே' பாடலும் 100 மில்லியன் சாதனையைக் கடக்கலாம்.