'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிவிட்டு அதன் பலனை அறுவடை செய்யும் விதமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. பொதுவாகவே அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்து கடைசியாக இயக்கிய பிகில் வரை பெரும்பாலும் கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் ஜவான் படம் எனது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி தான் உருவாகிறது என அதன் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அதனை பரிசீலித்த பின்னரே ஜவான் படத்தின் கதை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும், பேரரசு படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி மற்றும் ஆக்ரோச இளைஞர் என்கிற கதாபாத்திரங்களில்ல் நடித்திருந்தார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதால் இரண்டு படத்திற்கும் கதையில் ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.