ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி நாயரின் வீட்டில் இருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் நடிகை பார்வதி பற்றிய சில தகவல்களை வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வெளியானது, சில மீடியாக்களும் வெளியிட்டன. இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்று தனது வழக்கறிஞர் மூலம் பார்வதி நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.