ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கமல்ஹாசனின் 'விருமாண்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. தொடர்ந்து கொம்பன், தெறி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேசமயம் நிஜத்தில் இவரை பலருக்கும் பிடிக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சாய் தீனா, தொடர்ந்து சமூகம் குறித்து மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பேசி வருகிறார். பேச்சோடு மட்டுமல்லாமல், தனது பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கூட வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார். இந்நிலையில், சாய்தீனா, பிக்கு மெளரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மதமாற்றம் சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.