குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை |
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைந்து பாடும்போதுதான் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து பாடி உள்ளனர். அதுவும் இன்னொரு இசை அமைப்பாளரின் இசையில்.
காம்ப்ளக்ஸ் என்ற படத்தில் இடம் பெறும் “கத்தி கூவுது காதல்ஞ்” என்ற பாடலை பாடி உள்ளனர். கார்த்திக் ராஜாவின் இசையில் உருவாகிய இந்த பாடலை ஞானகரவேல் என்பவர் எழுதியுள்ளார். இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.