ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் லைலா. சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது ரீ-என்ட்ரி குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு மனைவியாக, தாயாக எனக்கு நிறைய கடமைகள் இருந்தது. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அவங்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. இதனால், சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய கணவர் மும்பையில் பிசினஸ் செய்கிறார். அதனால் குடும்ப பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவரது தம்பி மூலம் ரீ-என்ட்ரி ஆகுறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது சினிமா நிறைய மாறி இருக்கிறது. மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை, வித்தியசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என்கிறார் லைலா.