அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது | 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல் | எனது பயோபிக் என்றதும் மிரட்டுறாங்க.... என்னை பேச வைத்து விடாதீர்கள் : சோனா ஆதங்கம் |
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம்.
இந்த கேரக்டரில் முதன் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்று ஏற்கனவே ஒரு தகவல் உண்டு. அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை கீர்த்தி சுரேஷ் நிராகரித்ததாக கூறப்படுது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஒருவேளை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று போஸ்டர் டிசைன் ஒன்றை ரசிகர்கள் பலரும், இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் .